Home Slider மன்னரின் நாயை கேலி செய்தவருக்கு 37 ஆண்டுகள் சிறை – கிறுகிறுக்க வைக்கும் தாய்லாந்துச் சட்டம்!

மன்னரின் நாயை கேலி செய்தவருக்கு 37 ஆண்டுகள் சிறை – கிறுகிறுக்க வைக்கும் தாய்லாந்துச் சட்டம்!

581
0
SHARE
Ad

dog2பாங்காக் – தாய்லாந்து இராணுவச் சட்டம் என்பது உலகம் அறிந்த விசயம் தான். மன்னரை பற்றியோ, மன்னர் வம்சம் பற்றியோ யாரேனும் தவறாக பேசினால், உடனடியாக இராணுவச் சட்டம் பாயும். குறைந்தபட்ச தண்டனையே 15 ஆண்டுகள் தான். இவையெல்லாம் கூட ஜீரணித்துக் கொண்டாலும், தற்போது நிகழ்ந்து இருக்கும் சம்பவம் ஒன்று, உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மன்னர் ஆசையாக வளர்க்கும் நாயை, தொழிலாளி ஒருவர் இணையத்தில் கேலி செய்யப்போக, தற்போது அவர் மீது இராணுவச் சட்டம் பாய்ந்துள்ளது. அவருக்கு எப்படியும் 37 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தனகோர்ன் சிரிபாய்பூன் என்ற அந்த தொழிலாளி தற்போது இராணுவத்தின் பிடியில் உள்ளார்.

dogஅவர் ஒருபுறம் இருக்க, மன்னரின் நாய் பற்றி தற்போது தான் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது. தாய்லாந்து ஊடகங்களே, அந்த நாயை ‘கூன்’  என்று கண்ணியமாகத் தான் குறிப்பிடுவார்களாம். ஒரு தெருவோரத்தில் இருந்து மீட்கப்பட்ட அந்த நாய், நாளடைவில் மன்னருடன் மிக நெருக்கமாவிட்டதாம். அந்த நாயின் அன்பில் நெகிழ்ந்து போன மன்னர், அந்த நாய் குறித்து புத்தகமே வெளியிட்டுள்ளாராம். அதுமட்டுமல்லாமல் அந்த நாய் பற்றி அனிமேஷன் படமே வந்துள்ளதாம்.

#TamilSchoolmychoice

அப்படிப்பட்ட செல்ல நாயை கேலி செய்யப்போகத் தான், அந்த தொழிலாளி தற்போது சிக்கி உள்ளார். எனினும் தாய்லாந்து மன்னரின் இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. இந்த விவகாரத்தில், அனைத்துலக மனித உரிமை அமைப்பும், ஐநாவும் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.