Home Featured நாடு அம்னோ – பாஸ் கூட்டணிக்கு மஇகா எதிர்ப்பு தெரிவிக்காது!

அம்னோ – பாஸ் கூட்டணிக்கு மஇகா எதிர்ப்பு தெரிவிக்காது!

770
0
SHARE
Ad

Subramaniam-MICகோலாலம்பூர் – அம்னோ – பாஸ் கட்சிக்கு இடையிலான உறவு எந்த வகையிலும், தேசிய முன்னணியின் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளை பாதிக்காது என மஇகா தேசியத் தலைவர் டாக்டர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று கெப்போங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் டாக்டர் சுப்ரா பேசுகையில், “அம்னோவிற்கும், பாஸ் கட்சிக்கும் இடையில் எந்த ஒரு உடன்படிக்கை ஏற்பட்டாலும், தற்போது தேசிய முன்னணியின் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளுக்கும், அதன் கொள்கைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. அது தான் முக்கியம்”  என்று தெரிவித்துள்ளார்.

“இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான தேர்தல் ஒத்துழைப்பிற்கு நாங்கள் எதிராக இருக்கப் போவதில்லை” என்றும் டாக்டர் சுப்ரா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், தேசிய முன்னணியின் உச்ச மன்றக் கூட்டத்தின் போது, பாஸ் கட்சியின் சில கொள்கைகளுக்கு எதிராக மஇகா குரல் எழுப்பும் என்றும் சுப்ரா குறிப்பிட்டுள்ளார்.

அம்னோ – பாஸ் உடன்படிக்கை மஇகா-விற்கு சாதகமாக அமையுமா? என்ற கேள்விக்குப் பதிலளித்த சுப்ரா, அந்த விவகாரத்தில் இன்னும் ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

“இதற்கு முன்பு தேசிய முன்னணி வடிவமைப்பின் அடிப்படையில், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு அம்னோ ஆதரவாளர்களும் ஆதரவு தெரிவித்து வந்தனர். அம்னோ – பாஸ் உறவு அதே போன்றதொரு நிலையை ஏற்படுத்துமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்” என்றும் சுப்ரா தெரிவித்துள்ளார்.