Home Featured நாடு “பாக்சைட் கலந்துள்ளது; அந்தக் கடல்உணவுகளை உண்ணாதீர்கள்” – பகாங் மீன்வளத்துறை எச்சரிக்கை!

“பாக்சைட் கலந்துள்ளது; அந்தக் கடல்உணவுகளை உண்ணாதீர்கள்” – பகாங் மீன்வளத்துறை எச்சரிக்கை!

974
0
SHARE
Ad

10352829_468919436650092_6477580387114707192_nகோலாலம்பூர் – குவாந்தான், பகாங்கில் கடல் நீர் சிவப்பு நிறத்தில் மாறியதற்குக் காரணம் அதில் கலந்திருக்கும் பாக்சைட் (bauxite) தாது தான் எனத் தெரியவந்துள்ள வேளையில், இடைக்காலத்திற்கு யாரும் அக்கடல் பகுதியில் இருந்து பெறப்படும் கடல் உணவுகளை உண்ண வேண்டாம் என பகாங் மீன்வளத்துறை இயக்குநர் அட்னான் ஹுசைன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அசுத்தமடைந்துள்ள பகுதிகளில் இருந்து நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், முடிவுகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், அக்கடல் பகுதிகள் மிகவும் கலங்கலாக இருப்பதால், தற்போதைக்கு மீன் பிடிக்கும் நடவடிக்கைகளுக்கும் சாதகமாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, நீரின் இந்த சிவப்புத் தன்மைக்கு காரணம், அப்பகுதிகளின் அருகில் நிலம் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருந்ததாகவும், அதோடு, பாக்சைட் தாதுவும் கனமழையில் அடித்து வரப்பட்டு கடலில் கலந்து விட்டதாகவும் பகாங் சுகாதாரத்துறை துணை இயக்குநர் சைனல் அபிடின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

விரைவில், கடல் மற்றும் ஆறுகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.