Home Featured உலகம் பொங்கல் பண்டிகை: சிங்கப்பூரில் மக்களுடன் லீ சியான் லூங் ஆனந்தக் கொண்டாட்டம்!

பொங்கல் பண்டிகை: சிங்கப்பூரில் மக்களுடன் லீ சியான் லூங் ஆனந்தக் கொண்டாட்டம்!

1370
0
SHARE
Ad

PONGAL1சிங்கப்பூர் – உலக நாடுகளுக்கு அனைத்து மட்டத்திலும் முன்னுதாரணமாக இருக்கும் சிங்கப்பூர், தங்கள் நாட்டு மக்களிடையே எவ்வித பிரிவுணர்வும் வந்து விடக் கூடாது என்பதற்காக அனைத்து இன மக்களின் உணர்வுகளையும் மதித்து அதற்குத் தகுந்தார்ப் போல் செயல்பட்டு வருகிறது. அந்நாட்டுப் பிரதமர் லீ சியான் லூங்கும் மக்களை அரவணைத்தே செல்கிறார்.

PONGAL2அதற்கு மற்றுமொரு உதாரணமாக தமிழர்களின் முக்கியப் பண்டிகையான பொங்கலை நீண்ட வருடங்களுக்குப் பின்னர், மக்களுடன் லீ சியான் லூங் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ள அவர், ‘பொங்கலோ பொங்கல்’ என தமிழில் பதிவு செய்து உள்ளார். PONGAL3மேலும் அவரின் அந்த பதிவில், “கடந்த சில வருடங்களாக பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்கள், பங்கேற்க முடியாமல் இருந்து வந்தது. இம்முறை தவறாமல் மக்களுடன் பண்டிகையை கொண்டாடினேன். எனது கையால் பொங்கலையும், தோசையையும் தயார் செய்தேன். அனைத்து சிங்கப்பூர்வாசிகளும் எவ்வித இனப்பாகுபாடு இல்லாமல் பண்டிகைகளைக் கொண்டாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.