Home Featured நாடு “நாட்டின் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பை அரசு தக்க வைக்கும்” – நஜிப் உறுதி!

“நாட்டின் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பை அரசு தக்க வைக்கும்” – நஜிப் உறுதி!

574
0
SHARE
Ad

EPA/FAZRY ISMAIL

கோலாலம்பூர் – நாட்டில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பு நிலவ அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

மலேசியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எத்தகைய கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் பொறுத்துக் கொள்ள இயலாது என்றும், அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“அண்மையில் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்புகளுக்குச் சென்றபோது, அனைத்து நிலைகளைச் சார்ந்த மலேசியர்களும் இன, மத வேறுபாடுகளைக் கடந்து ஒருங்கிணைந்து மகிழ்ச்சியான அந்தத் தருணத்தைக் கொண்டாடியதைப் பார்த்தபோது நெஞ்சம் நிறைந்து போனது” என்று நஜிப் ரசாக்.கோம் என்ற தனது வலைப்பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

ஒரே மலேசியா கோட்பாட்டின் உண்மையான வெளிப்பாடு இதுதான் என்றும்,உலகத்தின் பார்வையில் மலேசியர்கள் தனித்துவமாக காட்சியளிக்கவும் ஒரே கூரையின் கீழ் பல்லின சமுதாயம் இருப்பதற்கான முக்கிய காரணமும் ஒரே மலேசியா கோட்பாடுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

“இந்த அம்சத்தை நாம் பாதுகாக்க வேண்டும். அதற்காக அரசாங்கம் தன்னால் இயன்றவரை சிறப்பாகச் செயல்படும். நாட்டில் நிலவும் பாதுகாப்பும் நல்லிணக்கமும் விலை மதிக்க இயலாதவை. எதனாலும் பிளவுபடாத உறுதியான பந்தம் நம் அனைவரையும் பிணைத்துள்ளது. மலேசியர்கள் தொடர்ந்து அமைதியாக, நல்லிணக்கத்துடன் வாழ்வதை உறுதி செய்வதற்கான அனைத்தையும் செய்வோம்” என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.