Home Featured நாடு மொசாம்பிக் தீவில் எம்எச்370 பாகம் ஒன்று கிடைத்துள்ளதாகத் தகவல்!

மொசாம்பிக் தீவில் எம்எச்370 பாகம் ஒன்று கிடைத்துள்ளதாகத் தகவல்!

1234
0
SHARE
Ad

Ccj_6SDWIAAjtbeகோலாலம்பூர் – தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக் தீவில், போயிங் 777 ரக விமானத்தின் பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அது மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370-ன் பாகமாக இருக்கலாம் என்றும் சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தப் பாகம் தற்போது விசாரணைக்காக மலேசியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, அந்த விமான பாகம் எம்எச்370-ன்  பாகம் தான் என்று உடனடியாக முடிவுக்கு வந்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என மலேசிய போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் கேட்டுக் கொண்டுள்ளார்.