கோலாலம்பூர் – இந்தோனிசியாவின் சுமத்ரா தீவின் மேற்கே நேற்று புதன்கிழமை மலேசிய நேரப்படி இரவு 8.49 மணியளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், மலேசியாவில் சுனாமி அபாயம் இல்லை என மலேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மலேசியாவை சுமத்ரா தீவுகள் கவசம் போல் பாதுகாப்பதால், அதன் பாதிப்புகள் இல்லை பிரதிபலிக்காது என்று மலேசிய வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்றாலும், சிலாங்கூர், ஜோகூர் கடற்பகுதிகளில் லேசான நில அதிர்வுகளை உணரக்கூடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.