Home Featured உலகம் எம்எச் 370: ரீயூனியன் தீவில் மற்றொரு உடைந்த பாகம் கண்டுபிடிப்பு!

எம்எச் 370: ரீயூனியன் தீவில் மற்றொரு உடைந்த பாகம் கண்டுபிடிப்பு!

980
0
SHARE
Ad

ரீயூனியன் – சில நாட்களுக்கு முன்னால் மொசாம்பிக் நாட்டில் காணாமல் போன எம்எச் 370 விமானத்தின் உடைந்த பாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதே விமானத்தின் மற்றொரு பாகம் என நம்பப்படும் பொருள் ஒன்று ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிசயம் என்னவென்றால், கடந்த ஆண்டு இதே கடல் பகுதியில் எம்எச் 370 விமானத்தின் உடைந்த பாகத்தைக் கண்டெடுத்துத் தந்த – ஜோனி பீக் – என்ற அதே நபர்தான் மீண்டும் இந்த பாகத்தைக் கண்டுபிடித்துள்ளார்.

MH370கடந்த ஆண்டு ரீயூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்டு எம்எச் 370 விமானத்தின் உடைந்த பாகம்…

#TamilSchoolmychoice

கடந்த வியாழக்கிழமை, ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஓய்வெடுப்பதற்காக சற்று நேரம் இளைப்பாறியபோது, இந்த உடைந்த பாகத்தைக் கண்டதாக ஜோனி கூறியுள்ளார்.

8க்கு 15 அங்குல அளவுள்ள இந்தப் பொருளின் மீது நீல நிற அடையாளம் ஒன்று காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

கடந்த ஆண்டு, உடைந்த பாகம் கிடைத்த அதே கடற்கரைப் பகுதியில், ஏறத்தாழ அதே இடத்தில் இந்த புதிய பொருளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், மொசாம்பிக் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட உடைந்த பாகத்தை ஆய்வு செய்வதற்காக, மலேசியக் குழு ஒன்று அந்த நாட்டைச் சென்றடைந்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு, மார்ச் 8ஆம் தேதி எம்எச் 370 விமானம் எந்தவிதத் தடயமும் இன்றி பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 239 பேருடன் மாயமாக மறைந்தது.