Home Featured நாடு மக்கள் பிரகடனம் குறித்து பிகேஆர் தலைவர்களுக்கு அன்வார் எச்சரிக்கை!

மக்கள் பிரகடனம் குறித்து பிகேஆர் தலைவர்களுக்கு அன்வார் எச்சரிக்கை!

871
0
SHARE
Ad

Anwar (2)கோலாலம்பூர் – மகாதீரின் மக்கள் பிரகடனம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், மக்கள் பிரகடனம் குறைபாடு கொண்டது என்றும், சீர்திருத்த நோக்கத்தில் முறையற்றது என்றும் விமர்சித்துள்ளார்.

இது குறித்து பிகேஆர் தலைவர்களுக்கு 8 பக்கக் கடிதம் ஒன்றையும் அன்வார் எழுதியுள்ளார்.

அதில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மொகமட் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் டாயிம் சைனுடின் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதிலுள்ள ஆபத்துக்கள் குறித்து பிகேஆர் தலைவர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

அவர்கள் தங்களது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள பிகேஆர் தலைவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் அன்வார் கவலை தெரிவித்துள்ளார்.