Home Featured தமிழ் நாடு 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10.30 மணிக்கு வெளியீடு!

12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10.30 மணிக்கு வெளியீடு!

1552
0
SHARE
Ad

Tamil-Nadu-12th-Results-2016சென்னை – பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவித்திருந்தது.

அதன்படி, பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (17-ஆம்) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் வெளியிடப்படும் என்றும், 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 25-ஆம் தேதி காலை 9:31 முதல் 10 மணிக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in. உள்ளிட்ட இணையதளங்கள் உடனுக்குடன் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.