Home Featured நாடு ஜிகா வைரஸ்: மலேசியர்கள் சிங்கப்பூர் செல்வதில் எந்தத் தடையும் இல்லை!

ஜிகா வைரஸ்: மலேசியர்கள் சிங்கப்பூர் செல்வதில் எந்தத் தடையும் இல்லை!

563
0
SHARE
Ad

zika virus

கோலாலம்பூர் – சிங்கப்பூரில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மலேசியர்கள் சிங்கப்பூர் செல்வதில் எந்தத் தடையும் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், சிங்கப்பூர் செல்லும் மலேசியர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும், குறிப்பாக காய்ச்சல் உள்ளிட்டவைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று துணை சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஹில்மி யாஹாயா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சிங்கப்பூருக்குச் செல்லும் மலேசியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, 90,000 நபர்களிடம் சுகாதாரத்துறை பரிசோதனைகள் மேற்கொண்டதாகவும் ஹில்மி யாஹாயா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் வசித்து வரும் நிரந்தரக் குடியிருப்புவாசி ஒருவருக்கு ஜிகா வைரஸ் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த மார்ச் 27-ம் தேதி முதல் மே 7-ம் தேதி, அவர் பிரேசிலில் சா பாலோவில் தங்கியிருந்துள்ளார். அதன் பின்பு சிங்கப்பூர் திரும்பிய அவருக்கு ஜிகா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதியானது.