Home Featured தமிழ் நாடு நாயை வீசியவர்கள் கைது! நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது!

நாயை வீசியவர்கள் கைது! நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது!

1018
0
SHARE
Ad

சென்னை – நாயை மாடியிலிருந்து வீசியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் மாடியில் இருந்து நாயைத் தூக்கி வீசியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கவுதம் சுதர்சன் (வயது 22) என்றும், அந்தக் காட்சியை கைத்தொலைபேசி வழி காணொளியாகப் படம் பிடித்தவர் அவரது நண்பர் ஆசிஸ் பால் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.dog-thrown-saved

காப்பாற்றப்பட்ட ‘பத்ரா’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள நாய் – இப்படிப்பட்ட ஒரு சோதனைக்குப் பின்னர்தான் அதற்கு நல்ல வாழ்வு என்பது விதிக்கப்பட்ட விதியோ? (படம்: நன்றி – அந்தோணி ரூபின் முகநூல் பக்கம்)

அந்த இருவரின் பெற்றோர்களும் அவர்களை காவல் துறையில் ஒப்படைத்ததைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்பதூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

#TamilSchoolmychoice

காவல் துறையின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு 10,000 ரூபாய் பிணை உத்தரவாதத்துடன் ஜாமீன் வழங்கியது.

பாதிக்கப்பட்ட நாய்க்கு மருத்துவ பரிசோதனை

dog-thrown-save-anthony-rubinநாயைத் தேடிக் கண்டுபிடிக்கவும், நாயைக் கொடுமைப் படுத்தவர்களை அடையாளம் காணவும் போராடிய மிருக நல ஆர்வலர் அந்தோணி ரூபின் – காப்பாற்றப்பட்ட நாயுடன் (படம்: நன்றி- அந்தோணி ரூபின் முகநூல் பக்கம்)

மாடியிலிருந்து வீசப்பட்ட பரிதாபத்துக்குரிய அந்த நாய் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளதுதான் இதில் ஆறுதலான அம்சம். அதன் காலில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

இன்று சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அந்த நாய் கொண்டு வரப்பட்டது. மருத்துவமனையில் நாய்க்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து சிகிச்சை அளித்த டாக்டர் பேசுகையில், மருத்துவ பரிசோதனையில் நாயின் வலது தொடையில் உள்ள எலும்பில் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“நாய்க்கு இனி உயிர் ஆபத்து இல்லை. மோசமான நிலையைக் கடந்து விட்டது. அதனால் இனி நடக்க முடியும். ஆனால், நாய் இன்னும் அதிர்ச்சியில் உள்ளது” என்றும் அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.dog-saved-chennai-treatment

பாதிக்கப்பட்ட நாய்க்கு வேப்பேரி கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை வழங்கப்படுகின்றது (படம்: நன்றி – ஷரவான் கிருஷ்ணன் முகநூல் பக்கம்)

நாயைக் காப்பாற்றப் போராடியவர்களில் ஒருவரான ஷரவான் கிருஷ்ணன் இதுகுறித்து, தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “பத்ரா மீதான முதல்கட்ட பரிசோதனைகளை வேப்பேரி மருத்துவர்கள் சிறப்பாகச் செய்துள்ளனர். அந்த நாயின் வலது காலிலும், முதுகிலும் என இரண்டு எலும்பு முறிவுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எலும்பு முறிவுகள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்டுள்ளதால், அந்த எலும்புகள் ஓரளவுக்கு கூடியுள்ளன. இருப்பினும் பத்ரா இன்னும் அதிர்ச்சியில் இருக்கின்றது. சிகிச்சைக்கு பத்ரா ஒத்துழைப்பதால், இன்னும் 4 முதல் 6 வாரங்களில் குணமாக வாய்ப்புள்ளது. பத்ரா ஏறத்தாழ 5 மாதங்கள் வயது கொண்டது என கணிக்கப்படுகின்றது. காணொளியில் காணப்பட்ட நாய் இதுதான் என்பது அதன் காயங்களிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

-செல்லியல் தொகுப்பு