Home Featured தமிழ் நாடு நாயை வீசியவர்கள் தப்பி ஓட்டம்! பின்னணி கதை என்ன?

நாயை வீசியவர்கள் தப்பி ஓட்டம்! பின்னணி கதை என்ன?

872
0
SHARE
Ad

சென்னை – நாயை மாடியிலிருந்து தூக்கி எறிந்ததோடு, அதை மகிழ்ச்சியுடன் படம் எடுத்துப் பகிர்ந்து கொண்ட மனித மிருகங்களை சென்னை காவல் துறையினர் தேடி வரும் வேளையில், அவர்கள் தாங்கள் வசித்த இடத்திலிருந்து தப்பி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் உடனடியாக சரணடைய வேண்டும், இல்லாவிட்டால் கைது செய்யப்படுவார்கள் என சென்னை காவல் துறை எச்சரித்துள்ளது.

vlcsnap-2016-07-04-18h23m17s203

#TamilSchoolmychoice

இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்

நாய் வீசப்பட்ட சம்பவம் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்ததாகும். மூன்று மாடிக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து கௌதம் என்ற கொடூரன் அந்த நாயை வீசி எறிய, அதை இன்னொரு மனித மிருகம் காணொளியாக படம் எடுத்திருக்கின்றது.

நாயை வீசியவன் ஒரு மருத்துவத் துறை மாணவன் என்பதுதான் அதிர்ச்சி தரும் மற்றொரு விஷயம். இவன் மருத்துவத் துறை படிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்தியாவின் சிஎன்என்-நியூஸ்18 ஆங்கிலத் தொலைக்காட்சி இந்த சம்பவம் குறித்து, “இந்த மனித மிருகத்தை எப்படி தண்டிப்பது” என்ற தலைப்பில், தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் தொலைபேசி வழி நடத்திய கருத்துக் கணிப்பில் பலரும், இத்தகைய கொடூர, அநாகரிக மனம் கொண்ட மனிதன் எப்படி ஒரு நல்ல மருத்துவராக உருவாக முடியும் – மனிதர்களை இவன் என்ன செய்வான் – என்பது போன்ற கருத்துகளை ஆத்திரத்துடனும், ஆவேசத்துடனும் பதிவு செய்துள்ளனர்.

காவல் துறையில் புகார்

chennai-dog-thrownஆயுசு கெட்டியான நாய் – காயங்களோடு அதைக் காப்பாற்றிய ஷரவான் (படம்: நன்றி – ஷரவான் கிருஷ்ணன் முகநூல் பக்கம்)

திங்கட்கிழமை (ஜூலை 4) நாய் வீசப்படும் இந்த காணொளியை மிருக நலன் போராளி ஷரவான் கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அதைத் தொடர்ந்து நாயை வீசியவனின் அடையாளம் வெளிச்சத்துக்கு வந்தது.

திங்கட்கிழமையன்று பிற்பகலுக்குள், ஷரவான் தனது சம எண்ணம் கொண்ட நண்பர்களுடன் இணைந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து ஆசிரியர்களையும், மற்ற மாணவர்களிடத்திலும் விசாரித்த போதுதான் இந்த சம்பவம் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்தது என்ற விவரம் அவர்களுக்குத் தெரியவந்தது.

இதில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் போல் (Paul) மற்றும் சுதர்சன் என்ற இரு நபர்கள் தற்போது தலைமறைவாகிவிட்டனர். சுதர்சன் திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே சென்றுவிட்டதாகவும், போல் நாகர்கோவிலில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு திரும்பிவிட்டதாகவும் அவர்களின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி முதல்வரின் எச்சரிக்கை

madha-hospital-collegeநாயை வீசிய மருத்துவத் துறை மாணவர்கள் பயிலும் மாதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை…

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட நபர்களின் பெற்றோர்களைத் தொடர்பு கொண்ட காவல் துறையினர், அவர்கள் இருவரும் சரண்டைய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.

அவர்கள் சரண்டையாவிட்டால், அவர்கள் அடுத்த தேர்வை எழுத முடியாது என அவர்கள் பயின்று வரும் மாதா மருத்துவக் கல்லூரி முதல்வரும் அவர்களின் பெற்றோர்களை எச்சரித்துள்ளனர்.

நாயை வீசியவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதன்பின்னரே கல்லூரி நிலையில் தாங்கள் நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறியுள்ள அவர்கள் படிக்கும் மாதா கல்லூரி நிர்வாகம், தற்போதைக்கு, அவர்கள் தங்களின் இறுதித் தேர்வை எழுதத் தாங்கள் அனுமதிக்கப் போவதாகவும் கூறியுள்ளனர்.

குன்றத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஃபிராங்க் ரூபன் சம்பந்தப்பட்டவர்களைத் தேடுவதற்கு திருநெல்வேலிக்கும், நாகர்கோவிலுக்கும் இரண்டு தனிப்படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகாரும் செய்யப்பட்டிருக்கின்றது.

இதற்கிடையில் வீசி எறியப்பட்டதால் காயமடைந்த அந்த நாய் இன்னும் உயிருடன் இருக்கின்றது. இதனை அந்த நாய்க்காக இவ்வளவு தூரம் போராட்டம் நடத்திய மிருகநல ஆர்வலர் ஷரவான் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கின்றார்.

“அந்த நாயை உயிருடன் கண்டு பிடித்துவிட்டோம். அதனால் சரியாக நடக்க முடியவில்லை. அந்த பெண் நாய் இப்போது எங்களுடன்தான் உள்ளது. அதற்கு சிகிச்சை அளித்து வருகின்றோம். அந்த நாய் என்னைப் பார்த்து இன்னும் வாலை ஆட்டிக் கொண்டு இருந்ததைப் பார்த்ததும் எனது இதயமே நொறுங்கி விடுவதுபோல் இருந்தது” என ஷரவான் தனது ஆங்கிலப் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஷரவானின் முகநூல் ஆங்கிலப் பதிவு

“Good news – The dog has been found alive. She is not able to walk properly. She is with us now. Will be under treatment. What breaks my heart is that she was still wagging her tail.”

என்ன செய்வது?

நாயை வீசி எறிந்த மனித மிருகங்களுக்கு மத்தியில் ஷரவான் போன்ற ‘உண்மையான’ மனிதர்கள்!

  • செல்லியல் தொகுப்பு