Home Featured கலையுலகம் ‘ஜகாட்’ சிறந்த மலேசியத் திரைப்படத்திற்கான விருது பெற்றது!

‘ஜகாட்’ சிறந்த மலேசியத் திரைப்படத்திற்கான விருது பெற்றது!

300
0
SHARE

jagatகோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற 28-வது தேசியத் திரைப்பட விழாவில், தமிழ் மொழித் திரைப்படமான ‘ஜகாட்’ சிறந்த மலேசியத் திரைபடத்திற்கான விருதினைப் பெற்றது.

தேசிய மொழிக்கான பிரிவில் ‘முனாஃபிக்’ என்ற திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதினைப் பெற்றுள்ளது.

அதோடு, ஜகாட் இயக்குநர் சஞ்சய் குமார் பெருமாளுக்கு சிறந்த புதுமுக இயக்குநருக்கான விருதும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Comments