Home Featured நாடு ரபிசிக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை!

ரபிசிக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை!

944
0
SHARE
Ad

Rafiziகோலாலம்பூர் – அங்கீகரிக்கப்படாத 1எம்டிபி தணிக்கை அறிக்கையை வைத்திருந்ததற்கும், அதனை ஊடகங்களிடம் காட்டியதற்கும் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் மொகமட் ரபிசி ரம்லிக்கு 18 மாத சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது அமர்வு நீதிமன்றம்

1எம்டிபி தணிக்கை அறிக்கையின் 98 பக்கங்களை அனுமதியின்றி வைத்திருந்து, அலுவலக இரகசியங்கள் சட்டம் 1972-ஐ மீறியுள்ளதாக ரபிசி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, கூட்டரசு அரசியலமைப்பு கட்டுரை 48 (1)-ன் படி, 1 வருடத்திற்கு மேல் சிறைத் தண்டனையோ அல்லது 2000 ரிங்கிட்டிற்கும் மேல் அபராதமோ விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்ப்பினர், அரச மன்னிப்பு பெறவில்லை என்றால், தன்னிச்சையாகத் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice