Home நாடு சுங்கை பாக்காப் : பிகேஆர் வேட்பாளர் ஜூன் 12-ஆம் தேதி அறிவிப்பு!

சுங்கை பாக்காப் : பிகேஆர் வேட்பாளர் ஜூன் 12-ஆம் தேதி அறிவிப்பு!

148
0
SHARE
Ad
ரபிசி ரம்லி

ஜோர்ஜ் டவுன் : ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எதிர்வரும் ஜூன் 12-ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரபிசி ரம்லி அறிவித்தார்.

நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஒற்றுமை அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களுக்கான ஆலோசனை மன்றத்தில், தேர்வு செய்யப்படும் பிகேஆர் கட்சியின் வேட்பாளர் பெயர் சமர்ப்பிக்கப்படும் எனவும் ரபிசி ரம்லி குறிப்பிட்டார்.

பிகேஆர் கட்சியின் உட்கட்டமைப்பு மூலம் சுங்கை பாக்காப் இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் பெயர்கள் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் ரபிசி கூறினார்.

#TamilSchoolmychoice

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (ஜூன் 9) சுங்கை பாக்காப் தேர்தல் பணிகளை ரபிசி தொடக்கி வைத்தார்.

பிகேஆர் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறது என்றாலும் நடைமுறைகளின் ஒற்றுமை அரசாங்கத்தின் அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் தேர்வுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒற்றுமை அரசாங்கத்தின் ஆலோசனை மன்றத்தில் வேட்பாளரின் பெயர் சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்படும் எனவும் ரபிசி தெரிவித்தார்.

சுங்கை பாக்காப் தேர்தல் கடுமையாக இருக்கும் என்றும் இந்த இடைத் தேர்தலில் வெல்வது சுலபமில்லை என்றும் அறிவித்த ரபிசி ரம்லி எனினும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் இழந்ததை மீட்க நாங்கள் கடுமையாகப் போராடுவோம் என சூளுரைத்தார்.

பினாங்கு சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர், 56 வயதான நோர் சாம்ரி லாத்திஃப் கடந்த மே 24-ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

சுங்கை பாக்காப், பினாங்கு மாநிலத்தின் நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் 3 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 59.4 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களையும், 22.5 விழுக்காட்டு சீன வாக்காளர்களையும், 17.4 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் 0.7 விழுக்காடு மற்ற வாக்காளர்களையும் சுங்கை பாக்காப் கொண்டிருக்கிறது.

காலமான நோர் சாம்ரி, நிபோங் திபால் தொகுதி பாஸ் கட்சியின் தலைவருமாவார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் 1,563 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த நூர்ஹிடாயா சே ரோஸ் ஆவார்.