Home Featured நாடு ஜோகூரில் கார் மோதி 9 குழந்தைகள் மரணம்!

ஜோகூரில் கார் மோதி 9 குழந்தைகள் மரணம்!

844
0
SHARE
Ad

9 childrenஜோகூர் பாரு – இன்று சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் ஜோகூர் பாரு, மிடில் ரிங் ரோடு அருகே, குழுவாக மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த 8 முதல் 16 வயது வரையிலான சிறார்கள் மீது, கார் ஒன்று மோதியதில் 9 குழந்தைகள் மரணமடைந்ததாக என்எஸ்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.

இந்த விபத்தில் நிசான் அல்மேரா என்ற கார் ஈடுபட்டிருப்பதாகவும் நம்பப்படுகின்றது. சாலையின் வளைவில் அச்சிறார்கள் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த அந்தக் கார், அவர்களின் மீது மோதியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஜோகூர் பாரு செலாத்தான் காவல்துறை தலைமைத் துணை ஆணையர் சுலைமான் சாலே இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார். எனினும், எத்தனை குழந்தைகள் இறந்திருக்கிறார்கள் என்ற உண்மையான நிலவரம் தெரியவில்லை.

#TamilSchoolmychoice

இறந்த குழந்தைகளின் உறவினர்கள் அளித்த தகவலின் படி, 9 பேர் இறந்துவிட்டதாக என்எஸ்டி கூறுகின்றது. இறந்த குழந்தைகளின் சடலங்கள் சுல்தானா அமினா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது.

விரைவில், காவல்துறை இச்சம்பவம் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.