Home Featured நாடு சவுதி மன்னருக்கு மலேசியாவின் உயரிய விருது!

சவுதி மன்னருக்கு மலேசியாவின் உயரிய விருது!

1005
0
SHARE
Ad

Saud Kingகோலாலம்பூர் – மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் சவுதி அரேபிய மன்னர் சல்மான் அப்துலாசிஸ் அல் சவுத்திற்கு, இஸ்தானா நெகாராவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, மலேசியாவின் உயரிய விருது வழங்கப்பட்டது.

மாமன்னர் (Yang di-Pertuan Agong) சுல்தான் மொகமட் வி, ‘டார்ஜா உத்தாமா ஸ்ரீ மாஹ்கோத்தா நெகாரா’ என்ற அவ்விருதை சவுதி மன்னருக்கு வழங்கி கௌரவித்தார்.

இவ்விழாவில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மான்சோர், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி மற்றும் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவி ஆகியோர் கலந்து கொண்டனர் என பெர்னாமா தெரிவிக்கின்றது.

#TamilSchoolmychoice

மலேசியாவிற்கு நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் மன்னர் சல்மான் அப்துல்லாசிஸ்சிற்கு, நேற்று நாடாளுமன்ற சதுக்கத்தில் ராஜ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.