Home Featured நாடு வடகொரியாவில் 11 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்!

வடகொரியாவில் 11 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்!

802
0
SHARE
Ad

Datuk-Seri-Reezal-Merican-Naina-Mericanகோலாலம்பூர் – வடகொரியாவில் இருக்கும் மலேசியர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது என அந்நாட்டு அரசு அறிவித்திருக்கும் நிலையில், வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங் விமான நிலையத்தில் மொத்தம் 11 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மலேசிய வெளியுறவுத்துறை அறிவித்திருக்கிறது.

இது குறித்து துணை வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன் கூறுகையில், “3 தூதரக அதிகாரிகள் உட்பட மொத்தம் 11 மலேசியர்கள் பியோங்யாங் விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். வடகொரியாவை விட்டு உடனடியாக வெளியேறும் படி அவர்களுக்கு மலேசியா அறிவுறுத்தியது. என்றாலும் விமான நிலையத்தில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.”

“இப்போதைக்கு அவர்களின் உயிருக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. அவர்களின் பாதுகாப்பை வடகொரிய அதிகாரிகள் கவனித்து வருகின்றார்கள்”

#TamilSchoolmychoice

“வடகொரியாவிற்கான மலேசியத் தூதர் கடந்த வாரமே அவரது மனைவியுடன் நாடு திரும்பிவிட்டார்” என்று ரீசல் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.