Home Featured நாடு வடகொரிய அதிபரை வசியப்படுத்தும் முயற்சியில் மலேசிய போமோ!

வடகொரிய அதிபரை வசியப்படுத்தும் முயற்சியில் மலேசிய போமோ!

1077
0
SHARE
Ad

Bomohகோலாலம்பூர் – வடகொரியாவின் பிடியில் இருக்கும் மலேசியர்களை மீட்கவும், துர்சக்திகளிடமிருந்து மலேசியாவைப் பாதுகாக்கவும் “ராஜா போமோ செதுனியா”, தனது சகாக்களுடன் சேர்ந்து கடற்கரையில் மாந்திரீகச் சடங்குகளை நடத்தும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

‘டத்தோ மகாகுரு’ என்று தன்னை அழைத்துக் கொள்ளும் பிரபல போமோ இப்ராகிம் மாட் ஜின், தனது மூன்று உதவியாளர்களுடன் கடற்கரை ஒன்றில் தனது பிரத்தியேகப் பொருட்களான இரண்டு இளநீர், தூரநோக்கியாகப் பயன்படுத்த இரண்டு மூங்கில் குச்சிகள், பாய் விரிப்பு ஆகியவற்றுடன் சடங்குகளில் ஈடுபட்டார்.

18 வினாடிகள் ஓடக்கூடிய அந்தக் காணொளியை வெளியிட்டவர் யார்? என்பது தெரியாத நிலையில், இணையத்தில் அக்காணொளி மலேசியர்கள் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

இச்சடங்கு நடத்தப்படுவதன் காரணம், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் மனதை இளக வைத்து, அந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மலேசியர்களை விடுவிப்பதற்காக என்று அக்காணொளியை வெளியிட்டவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த 2013-ம் ஆண்டு மலேசிய விமானம் எம்எச்370 மாயமான போது, மலேசிய விமான நிலையத்திற்கே சென்று அங்கு தனது மாந்திரீகச் சடங்குகளை நடத்தி ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் இந்த இப்ராகிம் மாட் ஜின் என்பது குறிப்பிடத்தக்கது.