Home Featured நாடு வடகொரியாவுடன் போர் ஏற்படுமா? மலேசியாவின் பதில் என்ன?

வடகொரியாவுடன் போர் ஏற்படுமா? மலேசியாவின் பதில் என்ன?

904
0
SHARE
Ad

MH370 MISSINGகோலாலம்பூர் – மலேசியாவிற்கும், வடகொரியாவிற்கும் இடையில் தூதரக உறவில் ஏற்பட்டுள்ள விரிசல், போராக மாற வாய்ப்பில்லை என தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்திருக்கிறார்.

“கொரிய தீபகற்பத்திற்குள் அமைந்திருக்கும் வடகொரியா மற்றும் ஐக்கிய நாடுகளைப் பார்த்தோமானால், அது மலேசியாவை விட மிக மோசமாக இருக்கிறது. வடகொரியாவைப் பற்றி எந்த ஒரு அவசர அறிக்கைகளும் இதுவரை எனக்கு வரவில்லை” என்று ஹிஷாமுடின் கூறியிருக்கிறார்.

மேலும், கிம் ஜோங் நம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சுமூகமான முடிவை ஏற்படுத்த தூதரங்கள் மூலமாக மலேசியா தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் ஹிஷாமுடின் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“தற்போது அந்தப் பேச்சுவார்த்தையின் படி, அமைச்சரவை இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறது. பியோங்யாங்கில் இருக்கும் மலேசியர்களின் பாதுகாப்புக்கு தான் முதலில் முன்னுரிமை. மற்றொன்று கிம் ஜோங் நம் மரணத்தில் உண்மையைக் கண்டறிய வெளிப்படையான விசாரணையை நடத்துவது” என்று ஹிஷாமுடின் தெரிவித்திருக்கிறார்.