Home Featured நாடு சென்னையிலிருந்து வந்த விமானத்தின் சக்கர காற்றழுத்தம் பாதிப்பு!

சென்னையிலிருந்து வந்த விமானத்தின் சக்கர காற்றழுத்தம் பாதிப்பு!

1280
0
SHARE
Ad

AirAsia_1சிப்பாங் – இன்று புதன்கிழமை அதிகாலையில் சென்னையிலிருந்து புறப்பட்டு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கேஎல்ஐஏ 2, வந்தடைந்த ஏர் ஆசியா விமானம் தரையிறங்கிய போது அந்த விமானத்தின் சக்கரத்தில் காற்றழுத்தம் குறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும், பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இன்று அதிகாலை 6.00 மணியளவில் ஏகே 12 (AK12) என்ற வழித்தட எண் கொண்ட அந்த விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

#TamilSchoolmychoice

பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் ஏர் ஆசியா அறிவித்துள்ளது.