Home கலை உலகம் பிக் பாஸ் : அனந்த் வைத்தியநாதன் வெளியேற்றப்பட்டார்

பிக் பாஸ் : அனந்த் வைத்தியநாதன் வெளியேற்றப்பட்டார்

1074
0
SHARE
Ad

சென்னை – உலகம் எங்கிலும் உள்ள தமிழர்களிடையே மிகப் பிரபலமானத் தொலைக்காட்சித் தொடராக ஸ்டார் விஜய்யில் ஒளியேறிக் கொண்டிருக்கும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 8-ஆம் தேதி (இந்திய நேரம் ஞாயிறு இரவு 9.00 மணி ஒளிபரப்பு) இடம் பெற்ற பகுதியில், பங்கேற்பாளர்களில் ஒருவரான அனந்த் வைத்தியநாதன் இரசிகர்களின் வாக்குகளுக்கு ஏற்ப இந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

அனந்த் வைத்தியநாதன்

நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அனந்த் வைத்தியநாதனை மற்ற பங்கேற்பாளர்கள் அனைவரும் கட்டியணைத்து கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர்.

#TamilSchoolmychoice

கமல்ஹாசன் பின்னர் அனந்த் வைத்தியநாதனை மேடையில் சந்தித்து உரையாடினார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத் தொலைக்காட்சியான ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான இந்த பிக்பாஸ் தொகுப்பு இன்று திங்கட்கிழமை அஸ்ட்ரோ ஒளியலை 224 வழி மலேசியாவில் ஒளிபரப்பாகும்.