Home உலகம் தாய்லாந்து குகையிலிருந்து இதுவரை 4 பேர் மீட்பு

தாய்லாந்து குகையிலிருந்து இதுவரை 4 பேர் மீட்பு

929
0
SHARE
Ad

பேங்காக் – தாய்லாந்து சியாங் ராய் வட்டாரத்தில் உள்ள  குகை ஒன்றில் சிக்கியுள்ள 12 சிறுவர்களையும் ஒரு பயிற்சியாளரையும் கொண்ட குழுவிலிருந்து இதுவரை 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

11 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களைக் கொண்ட அந்தக் குழுவினரும் 25 வயதுடைய அவர்களின் பயிற்சியாளரும் கடந்த 16 நாட்களாக அந்தக் குகையில் சிக்கியிருக்கின்றனர்.

அந்தக் குழுவிலிருந்து இதுவரை 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

மீட்கப்பட்ட நால்வரும் நலமுடன் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் அந்த சிறுவர்களின் மீட்புப் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் உலகக் காற்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளைக் காண்பதற்கு அந்த சிறுவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.