Home வணிகம்/தொழில் நுட்பம் டிஜி-அக்சியாத்தா நிறுவனங்கள் இணைப்பால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கலாம்

டிஜி-அக்சியாத்தா நிறுவனங்கள் இணைப்பால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கலாம்

1022
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முக்கியமானவை டிஜி (DIGI) மற்றும் செல்கோம் வணிக முத்திரையைக் கொண்ட அக்சியாட்டா (AXIATA) நிறுவனம் ஆகியவையாகும்.

டிஜி நிறுவனம் 016 எண்களில் தொடங்கும் கைத்தொலைபேசிகளுக்கான சேவையை வழங்கும் நிறுவனமாகும். செல்கோம்-அக்சியாத்தா 019 எண்களில் தொடங்கும் சேவைகளை வழங்கும் நிறுவனமாகும்.

டிஜி நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளைக் கொண்ட நிறுவனம் நார்வே நாட்டின் டெலினோர் ஏஎஸ்ஏ (Telenor ASA) என்ற நிறுவனமாகும். இந்நிறுவனம் ஆசியாவில் டிஜி நிறுவனத்தின் கீழ் கொண்டுள்ள சொத்துகளை செல்கோம் நிறுவனத்துடன் இணைக்கவிருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து இந்த இரு நிறுவனங்களுக்கும் 9 நாடுகளில் இருக்கும் சுமார் 300 மில்லியன் பயனீட்டாளர்கள் ஒன்றாக ஒரே குடையின் கீழ் இனி வருவர்.

ஆனால், இந்த இரு மாபெரும் நிறுவனங்களின் இணைப்பால், அவற்றின் தொழில்நுட்ப ஆற்றல்களும் ஒன்றோடு ஒன்றாக இணையும் என்பதால் அதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பை எதிர்நோக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

இதுகுறித்து அக்கறை கொண்டுள்ள பிரதமர் துன் மகாதீரும் இந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இணைப்பு குறித்து மேலும் விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துன் மகாதீர் பதவியேற்ற இந்த ஓராண்டில் நாட்டில் நிகழும் மிகப் பெரிய வணிக இணைப்பு, டிஜிக்கும் செல்கோமுக்கும் இடையிலான வணிக இணைப்பு என வர்ணிக்கப்படுகிறது.

செல்கோம் நிறுவனம் செயல்படும் நாடுகளில் சுமார் 12 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு தங்களின் பணிகளில் இருந்து சுயமாக, பண இழப்பீட்டுடன் பதவி விலகிக் கொள்ளும் தேர்வு வழங்கப்படும் என செல்கோம் தலைமைச் செயல் அதிகாரி ஜமாலுடின் இப்ராகிம் கூறியிருக்கிறார்.