Home One Line P1 செல்கோம்- டிஜி இணைகிறது

செல்கோம்- டிஜி இணைகிறது

884
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் இரண்டு பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான செல்கோம் மற்றும் டிஜி தற்போது இணைவதற்கான பேச்சுவார்த்தைகளின் இறுதி கட்டங்களில் உள்ளன.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், செல்கோமின் தாய் நிறுவனமான ஆக்ஸியாடா குரூப் பெர்ஹாட் புதிய நிறுவனத்தில் 51 விழுக்காடு பங்குகளை வைத்திருப்பதாக உறுதிப்படுத்தியது.

இரு நிறுவனங்களின் அளவு, உள்கட்டமைப்பு, அனுபவம் மற்றும் நிதி வலிமை ஆகியவற்றை இணைத்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதே சமீபத்திய நடவடிக்கை என்று ஆக்ஸியாடா தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

நாட்டின் மின்னியல் பொருளாதாரத் திட்டமான மைடிஜிட்டலுக்கு இணங்க, 5ஜி திட்டத்தை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதோடு, நாடு முழுவதும் அதிவேக இணைய இணைப்புகளை வழங்குவதற்கும் இது உதவுகிறது என்று அது கூறியது.

செல்கோம் டிஜி பெர்ஹாட் பர்சா மலேசியாவில் பட்டியலிடப்படும். இந்த இணைப்பு, செல்கோம் அல்லது டிஜி ஊழியர்களின் எந்தவொரு வலுக்கட்டாய பணிநீக்கத்தையும் ஏற்படுத்தாது.