Home One Line P1 ஆக்ஸியாதா, டெலினோர், டிஜி இணைப்புக்கான பரிவர்த்தனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

ஆக்ஸியாதா, டெலினோர், டிஜி இணைப்புக்கான பரிவர்த்தனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

1289
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஆக்ஸியாதா குழுமம், டெலினோர் ஏசியா பிரைவேட் லிமிடெட் மற்றும் டிஜி.காம் பெர்ஹாட் ஆகியவை திங்களன்று தங்களது இணைப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும், கூட்டு நிறுவனமாக குறிப்பிடப்படும் டிஜியுடன் செல்கோம் ஆக்ஸியாதா பெர்ஹாட் (செல்காம்) இணைக்க உத்தேச பரிவர்த்தனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் அறிவித்தது.

இன்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம், வணிக ரீதியாகவும், நெகிழக்கூடிய டிஜிட்டல்-மைய சேவை வழங்குநராகவும், மலேசியாவின் டிஜிட்டல் விருப்பங்களை இயக்க ஒரு முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக உருவாக்குவதற்கான அவர்களின் நோக்கத்தின் தீவிரத்தை நிரூபித்ததாக மூன்று தரப்பும் விளக்கின.

முன்னதாக, நாட்டின் இரண்டு பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான செல்கோம் மற்றும் டிஜி  இணைவதற்கான பேச்சுவார்த்தைகளின் இறுதி கட்டங்களில் இருந்தன.

#TamilSchoolmychoice

இரு நிறுவனங்களின் அளவு, உள்கட்டமைப்பு, அனுபவம் மற்றும் நிதி வலிமை ஆகியவற்றை இணைத்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதே சமீபத்திய நடவடிக்கை என்று ஆக்ஸியாடா தெரிவித்திருந்தது.

மேலும், செல்கோம் டிஜி பெர்ஹாட் பர்சா மலேசியாவில் பட்டியலிடப்படும். இந்த இணைப்பு, செல்கோம் அல்லது டிஜி ஊழியர்களின் எந்தவொரு வலுக்கட்டாய பணிநீக்கத்தையும் ஏற்படுத்தாது.