Home நாடு கோலாலம்பூர், புத்ராஜெயாவில் தடுப்பூசி பதிவு 100 விழுக்காட்டை எட்டியது

கோலாலம்பூர், புத்ராஜெயாவில் தடுப்பூசி பதிவு 100 விழுக்காட்டை எட்டியது

537
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் கொவிட் -19 தடுப்பூசி பதிவு இலக்கு 100 விழுக்காடு இலக்கை எட்டியுள்ளது.

இது திங்களன்று கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் அணுகல் உத்தரவாத சிறப்புக் குழுவின் இணையதளத்தில் பகிரப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.

11.59 ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி, கோலாலம்பூரில் மொத்தம் 1,385,714 நபர்கள் தடுப்பூசிக்கு பதிவு செய்திருந்தனர். புத்ராஜெயா 76,536 பதிவுகளை பதிவு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

இரு மாநிலங்களும், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்களிடையே 100 விழுக்காடு பதிவுகளை எட்டிய மத்திய மண்டங்களாகும்.

மூன்றாவது இடத்தில் 3,745,931 நபர்களுடன் (78.90 விழுக்காடு) சிலாங்கூர் உள்ளது.

இருப்பினும், சபாவில் மிகக் குறைவாக 29.19 விழுக்காடு அல்லது 804,851 நபர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

அதே நேரத்தில், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகியவையும் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளைப் பதிவு செய்தன.

குறைந்த எண்ணிக்கையிலான தடுப்பூசி வரவேற்புகளை பதிவு செய்யும் மாநிலங்களில் சிலாங்கூர் உள்ளது.