Home No FB காணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு

காணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு

620
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு| 21 ஜூன் 2021
Selliyal Video | Tamil Nadu workers tortured in Malaysia : 1 arrested; 2 rescued | 21 June 2021

தமிழகத்தின் இணைய ஊடகம் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளர் இலட்சுமி இராமகிருஷ்ணனுக்கு வழங்கிய நேர்காணலில் வேலாயுதம் என்ற நபர், மலேசியாவில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள உணவகத்தில் பணியாற்றும் போது தனக்கும் சக தொழிலாளர்களுக்கும் இழைக்கப்பட்ட துன்புறுத்தல்களைப் பட்டியலிட்டிருந்தார்.

மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் இலட்சுமி இராமகிருஷ்ணனுடன் நேர்காணல் மூலம் மலேசிய அரசாங்கத் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து காவல் துறையிலும் புகார்கள் செய்யப்பட அதிரடியாக நடவடிக்கையில் இறங்கியது பெட்டாலிங் ஜெயா காவல் நிலையம். சம்பந்தப்பட்ட உணவகத்தில் அதிரடி சோதனை நடத்தி, ஒருவரைக் கைது செய்திருக்கிறது. இரண்டு தொழிலாளர்களை மீட்டிருக்கிறது.

அந்த விவகாரம் குறித்து விவரிக்கிறது மேற்கண்ட  செல்லியல் காணொலி.