Home One Line P1 சாஹிட்- அன்வார் சத்தியம் செய்வதே மேல்!

சாஹிட்- அன்வார் சத்தியம் செய்வதே மேல்!

672
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் அன்வார் இப்ராகிம் தாங்கள் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள நஜிப் ரசாக்கின் முன்மாதிரியைப் பின்பற்றுமாறு முன்னாள் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா பரிந்துரைத்தார்.

கம்போங் பாரு மசூதியில் மங்கோலியப் பெண்ணான அல்தான்துயா ஷாரிபூவின் மரணத்திற்கு பொறுப்பேற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், நஜிப் மசூதியில் சத்தியம் செய்யதாக அனுவார் கூறினார்.

“இந்த நெருக்கடியை நாம் தீர்க்க விரும்பினால், சாஹிட் நஜிப்பின் முன்மாதிரியைப் பின்பற்றலாம். அன்வாருடன் மசூதிக்குச் சென்று சத்தியம் செய்யலாம். அதுவும் ஒரு வழி, ஏனென்றால் காவல்துறை விசாரணைக்கு நீங்கள் காத்திருக்க விரும்பினால், விசாரணை நீங்கள் விரும்பியதைப் போலல்லாமல் இருக்கலாம். காவல் துறை சதி செய்கிறார்கள் என்று கூறுவர்.

#TamilSchoolmychoice

“எனவே எந்த நேரத்திலும் அது முடிவடையாது, ஏனெனில் சாட்சிகள் அவர்கள் இருவருமே,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.