Home One Line P1 அன்வார்- சாஹிட் குரல் பதிவு: ஷாஹிடான் காவல் துறையில் புகார்

அன்வார்- சாஹிட் குரல் பதிவு: ஷாஹிடான் காவல் துறையில் புகார்

542
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோருக்கு இடையில் நடந்ததாகக் கூறப்படும் குரல் பதிவில் தனது பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதை அடுத்து காவல் துறையில் புகார் அளிப்பதாக அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிடான் காசிம் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி உரையாடலின் நம்பகத்தன்மையை அதிகாரிகள் ஆராய்ந்து முடிவு செய்ய முடியும் என்பதால் பெர்லிஸ் அம்னோ தலைவர் காவல் துறையில் புகார் அளிக்க மற்றவர்களையும் கேட்டுக்கொண்டார்.

சாஹிட் மற்றும் அன்வார் இருவரும் இந்த குரல் பதிவை மறுத்துள்ளனர்.

#TamilSchoolmychoice

“எனது தலைவருக்கும் பிகேஆரைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் உரையாடல் உள்ளதாகக் கூறப்படும் குரல் பதிவில், எனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனது உரையின் போது நான் கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது, ” என்று ஷாஹிடான் எப்எம்டியிடம் கூறினார்.

“குரல் பதிவு போலியானது என்று சாஹிட் கூறியுள்ளார், ஆனால் எனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் என்னை மட்டம் தட்டுவது தவறல்ல, நான் ஒரு நல்ல பேச்சாளர் அல்ல. ஆனால் எனக்கு எதிரான கூச்சல் திட்டமிடப்பட்டதா என்பதை அறிய விரும்புகிறேன். ” என்று அவர் கூறினார்.