Home One Line P1 தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர் ஜசெகவிலிருந்து விலகல்

தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர் ஜசெகவிலிருந்து விலகல்

559
0
SHARE
Ad

ஷா ஆலாம்: தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர் பிரையன் லாய் வாய் சோங், ஜசெகவிலிருந்து விலகுவதற்கான தனது முடிவை அறிவித்துள்ளார்.

அவர் மணஉறவுக்கப்பாற்பட்ட விவகாரங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் இந்த பதவி விலகலை அறிவித்தார்.

ஜசெகவை மேலும் சிக்கலில் வைக்க விரும்பவில்லை என்று லாய் இன்று பிற்பகல் ஓர் அறிக்கையில் கூறினார்.

#TamilSchoolmychoice

“எனது தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக எனது கட்சியின் பெயர் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. கவனமாக பரிசீலித்தபின், ஜசெகவை விட்டு ஜசெக மற்றும் நம்பிக்கை கூட்டணி சார்ந்த சட்டமன்ற உறுப்பினராக எனது தொகுதியில் பணியாற்ற நான் இன்று முடிவு செய்தேன்,” என்று அவர் கூறினார்.

கடந்த வாரம் சிலாங்கூர் ஜசெக செயலாளர் பதவியில் இருந்து விலகிய பிறகும், தனது துரோகம் தொடர்பாக தொடர்ச்சியான “தாக்குதல்களை” அடுத்து கட்சியிலிருந்து விலகத் தெரிவுசெய்ததாக அவர் கூறினார்.

“கட்சிக்கு ஏற்பட்ட தீங்குக்கு மீண்டும் ஜசெகவிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.