கோலாலம்பூர்: அம்னோ கட்சித் தேர்தலை மே மாதத்திற்குள் நடத்துமாறு அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் ரீசால் மெரிக்கன் நைனா மெரிக்கன் கட்சியை வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயக மனப்பான்மையில், மே மாதத்தில் கட்சி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், ஏனெனில் அனைத்து பதவிகளின் பதவிக்காலமும் முடிவடைகிறது என்று அவர் கூறினார்.
“தேர்தல்களை நடத்துவதன் மூலம், நாம் நமது வாக்குகளில் உண்மையாக இருக்கிறோம் என்பதை இது காண்பிக்கும். தேர்தல்களை ஒத்திவைக்க ஏற்பாடு இருந்தாலும், கட்சி அரசியலமைப்பில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்களை நடத்த வேண்டும் என்று இருப்பதால், எந்த தாமதமும் இன்றி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
“ஜசெக மற்றும் பிற கட்சிகள் தாமதமின்றி செய்ய முடிந்தால், அம்னோ அவ்வாறு செய்ய முடியாத எந்த காரணமும் இல்லை,” என்று அவர் கூறினார்.