Home One Line P2 “மலேசிய செம்பனை எண்ணெயை வாங்காதீர்கள்” – இந்தியாவின் வணிக அமைப்புகள் போர்க்கொடி

“மலேசிய செம்பனை எண்ணெயை வாங்காதீர்கள்” – இந்தியாவின் வணிக அமைப்புகள் போர்க்கொடி

1451
0
SHARE
Ad

புதுடில்லி – பிரதமர் துன் மகாதீர் ஐ.நா.மன்றத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து எழுப்பிய காரணத்தால், அண்மையக் காலமாக இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நல்லுறவில் நெருக்கடி எழுந்திருக்கிறது.

இந்தப் பனிப் போரின் இடையில் மையம் கொண்டுள்ளது மலேசியாவின் செம்பனை எண்ணெய். நமது செம்பனை எண்ணெயை மிக அதிக அளவில் இறக்குமதி செய்யும் உலக நாடுகளில் ஒன்று இந்தியா.

இருநாடுகளுக்கும் இடையிலான மோதல் காரணமாக, மும்பையை மையமாகக் கொண்டு செயல்படும் எண்ணெய் விதைகளுக்கான சுத்திகரிப்பு ஆலைகளுக்கான சங்கத்தின் தலைவர் அதுல் சதுர்வேதி இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், “மலேசியாவுக்கும் நமது நாட்டுக்கும் இடையிலான நல்லுறவில் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில் நாம் நாட்டின் இறையாண்மையையும், அரசாங்கத்தையும் சார்ந்து செயல்பட வேண்டும். எனவே, மலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெயை வாங்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எங்களின் அறிவுரையை ஏற்பீர்கள் எனக் கருதுகிறேன் என்றும் அதுல் சதுர்வேதி அறைகூவல் விடுத்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.மன்றத்தில் மலேசியா எடுத்துப் பேசியது குறித்து இந்தியா கடும் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் அதுல் சதுர்வேதி கூறியுள்ளார்.

இந்திய அரசாங்கம் இந்த விவகாரத்தில் தெளிவான முடிவு எடுக்கும் வரையில் மலேசிய செம்பனை எண்ணெயை வாங்குவதை ஒத்தி வைப்போம் என்றும் கூறியிருக்கிறார் அதுல் சதுர்வேதி.

2018-ஆம் ஆண்டில் மட்டும் 6.9 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய செம்பனை எண்ணெயை மலேசியாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்தது.

உலகிலேயே அதிக அளவில் தாவர எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா ஆகும். இதில் பெரும்பாலான எண்ணெய் மலேசியாவிலிருந்தும், இந்தோனிசியாவிலிருந்தும் இறக்குமதியாகிறது.