Home நாடு “பக்காத்தான் மாநிலங்கள் மாற்றாந்தாய் பிள்ளைகள் அல்ல” – நஸ்ரி கருத்து

“பக்காத்தான் மாநிலங்கள் மாற்றாந்தாய் பிள்ளைகள் அல்ல” – நஸ்ரி கருத்து

519
0
SHARE
Ad

Nazri Abdul Azizகோலாலம்பூர், ஜூலை 15 – பக்காத்தான் ஆட்சி செய்யும் மாநிலங்கள் அனைத்தும் மாற்றாந்தாய் பிள்ளைகளாக நடத்தக்கூடாது என்று சுற்றுலாத் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அஜீஸ் கூறியுள்ளார்.

பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்குடன் இணைந்து நடத்தப்பட்ட அந்த அரிதான செய்தியாளர் கூட்டத்தில் பேசிய நஸ்ரி,

“சுற்றுலாத்துறை அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படுத்தப்படும். அது பக்காத்தான் ஆட்சி செய்யும் மாநிலங்களாக இருந்தாலும் வரும் 2014 ஆம் ஆண்டிற்குள் ‘மலேசிய வருகை’ திட்டத்தின் தேசிய அளவிலான இலக்கை அடைய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்” என்று கூறினார்.

#TamilSchoolmychoice

“நான் கிளந்தான், பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநிலங்களை மாற்றாந்தாய் பிள்ளைகளாக நினைக்கவில்லை. அந்த மாநிலங்களை தவிர்த்து என்னால் எப்படி இலக்கை அடைய முடியும்? அவர்கள் வெற்றி பெற்றால் நானும் வெற்றி பெற்றது போல் தான்” என்று இன்று மதியம் நாடாளுமன்ற வளாகத்தில் நஸ்ரி கூறினார்.

யார் வேண்டுமானாலும் குழுவுக்கு தலைமை வகிக்கலாம்

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சுற்றுலாத்துறையின் நிர்வாகக் குழுவிற்கு யார் வேண்டுமானாலும் தலைமை வகிக்கலாம். பினாங்கு சுற்றுலாத்துறைக்கு பிகேஆர் கட்சியின் முன்னாள் பாலேக் புலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் யுஸ்மாடி யூசோப் தலைமை வகிக்க நான் பரிந்துரை செய்துள்ளேன் என்று நஸ்ரி குறிப்பிட்டார்.

மேலும், இந்த நிர்வாகக் குழு வரும் ஆகஸ்ட் மாதம் (ரமலான் முடிந்து) அமைக்கப்படும் என்றும், அந்த அமைப்புக்கான ஊழியத்தொகை அனைத்தும் மத்திய அரசாங்கம் ஏற்கும் என்றும் நஸ்ரி கூறினார்.

இதனிடையே நஸ்ரியின் நிர்வாகத்தை பாராட்டிய லிம் குவான் எங், அவரது திட்டங்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

“மலேசியாவில் உள்ள சுற்றுலாத்துறைகளை சிறப்பாக நடத்தினால், அந்த வருமானம் அனைத்தும் மலேசியாவிற்கும், மத்திய அரசாங்கத்திற்கும் தான் போகப்போகிறது. எனவே இது ஒரு நல்ல தொடக்கம்” என்று லிம் குவான் எங் குறிப்பிட்டுள்ளார்.