Home படிக்க வேண்டும் 2 ‘தி எட்ஜ்’ குழுமத்துடன் இணைந்தது ‘தி மலேசியன் இன்சைடர்’

‘தி எட்ஜ்’ குழுமத்துடன் இணைந்தது ‘தி மலேசியன் இன்சைடர்’

1023
0
SHARE
Ad

The-Edge-Malaysiaகோலாலம்பூர், ஜூன் 9 – தி எட்ஜ் குழுமம் (டிஇஎம்ஜி) தங்களது நிறுவனத்தை விரிவு படுத்தும் நோக்கில் ‘தி மலேசியன் இன்சைடர்’ செய்தி இணையத்தளத்தை கையகப்படுத்தியுள்ளது.

இது குறித்து தி எட்ஜ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹோ காய் டாட் கூறுகையில், “தி மலேசியன் இன்சைடரை கையகப்படுத்தியதன் மூலம் டிஜிட்டல் ஊடகத்தில் எங்களது பங்களிப்பை இன்னும் கூடுதல் சிறப்பாக செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

“ஒருங்கிணைந்த ஊடகக் குழுமமான தி எட்ஜ், தனது ஊடக பங்களிப்பை விரிவு படுத்தும் அனைத்து வாய்ப்புகளையும் எதிர்நோக்கியுள்ளது. அந்த வகையில் ‘தி மலேசியன் இன்சைடர்’ எங்கள் குழுமத்துடன் இணைந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்” என்றும் ஹோ தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

டிஇஎம்ஜி குழுமம் தி எட்ஜ் பிசினஸ் அண்ட் இன்வெஸ்மண்ட் (The Edge business and investment), தி எட்ஜ் பினான்ஷியல் டெய்லி (The Edge Financial Daily), பெர்சனல் மணிமேகஸின் (Personal Moneymagazine) மற்றும் நியூஸ் வெப்சைட் (www.fz.com) ஆகிய இணையத்தளங்களை உள்ளடக்கியுள்ளது.

அதோடு சிங்கப்பூரின் ‘தி எட்ஜ் பிரிண்ட் வீக்லி’ மற்றும் இணையத்தளத்தையும் சொந்தமாகக் கொண்டுள்ளது.

‘தி மலேசியன் இன்சைடர்’ நிறுவனத்தின் தலைவர் நிர்வாக அதிகாரி ஜஹாபார் சாதிக் கூறுகையில், “தி எட்ஜ் குழுமத்துடன் இணைவதிம் மிகவும் மகிழ்ச்சி. அதை நாங்கள் வரவேற்கிறோம்.  கடந்த 2008 -ம் ஆண்டு தொடங்கிய நாள் முதல் ‘தி மலேசியன் இன்சைடர்’ ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த செய்தி இணையத்தளமாக செயல்பட்டு வருகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனது தலைமையிலான ஆசிரியர் குழு தொடரும் என்றும் ஜஹாபார் கூறியுள்ளார்.

கடந்த 2008 -ம் ஆண்டு, 12 வது பொதுத்தேர்தலுக்குப் பின்னர், பிங் ஹோங் க்வாங் மற்றும் ஸ்ரீதர் சுப்ரமணியம் ஆகிய இருவரால்  ‘தி மலேசியன் இன்சைடர்’  தொடங்கப்பட்டது. எனினும் அதன் பின்னர் ஜாஹாபர், லெஸ்லி லாவ் மற்றும் அவரது சகோதரி ஜோன் லாவ் ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் லெஸ்லி மற்றும் ஜோன் ஆகிய இருவரும் ‘தி மலாய் மெயில்’ என்ற புதிய செய்தி இணையத்தளத்தை உருவாக்கி, தற்போது நிர்வாகம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.