இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது, “ஹைதராபாதைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள், இமாசலப் பிரதேச மாநிலத்துக்கு சுற்றுலா சென்றனர். அவர்களில் 6 மாணவிகள், 18 மாணவர்கள், மாண்டி அருகே உள்ள பியாஸ் ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை இறங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 5 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.