Home நாடு அல்தான்துன்யா வழக்கில் புதிய ஆதாரம்: நஜிப், ரோஸ்மா உட்பட 9 பேர் மீது பாலா குடும்பத்தினர்...

அல்தான்துன்யா வழக்கில் புதிய ஆதாரம்: நஜிப், ரோஸ்மா உட்பட 9 பேர் மீது பாலா குடும்பத்தினர் வழக்கு!

927
0
SHARE
Ad

BALAகோலாலம்பூர், ஜூன் 15 – மங்கோலிய அழகி அல்தான்துன்யா கொலை வழக்கில், முக்கிய சாட்சியான மறைந்த தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் (படம்) குடும்பத்தினர், பிரதமர் நஜிப் துன் ரசாக், அவரது மனைவி ரோஸ்மா மான்சோர் உட்பட 9 பேர் மீது வழக்குத் தொடுக்கவுள்ளனர்.

தாங்கள் 5 ஆண்டுகள் நாடு கடந்து குடும்பத்தோடு இந்தியாவில் வசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளியதற்காக இந்த வழக்கு தொடுக்கவுள்ளதாக அவர்களின் குடும்ப வழக்கறிஞர் அமெரிக் சித்து நேற்று தனது பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வழக்கில் ‘புதிய ஆதாரம்’ ஒன்று கிடைத்துள்ளது தான் இந்த முடிவுக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், அமெரிக் சித்து அந்த புதிய ஆதாரம் குறித்து விரிவான விளக்கமளிக்கவில்லை.

இந்த வழக்கில் நஜிப்பின் சகோதரர்களான ஜோஹாரி, நஸிம், மூத்த வழக்கறிஞர் செசில் ஆப்ரஹாம் மற்றும் அவரது மகன் சுனில் ஆப்ரஹாம் ஆகியோர் எதிர்வாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், தொழிலதிபர் தீபன் ஜெய்கிஷான், சத்தியப்பிரமாண ஆணையர் ஸைனல் அபிடின் முஹாயாட் மற்றும் வழக்கறிஞர் அருணம்பலம் ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கிற்கான அனைத்து ஆவணங்களும் கடந்த ஜூன் 11 -ம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக அமெரிக் தெரிவித்தார்.

பாலாவின் மனைவி செல்வி மற்றும் அவரது 3 குழந்தைகள் இந்த வழக்கின் மனுதாரர்கள் ஆவர்.