Home தொழில் நுட்பம் 14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கையில் இன்று துவங்கியது!

14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கையில் இன்று துவங்கியது!

1055
0
SHARE
Ad

சிங்கப்பூர், மே 30 – சிங்கப்பூரில் உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று காலை துவங்கியது. இன்று மே 30 தொடங்கி ஜூன் 1 -ம் தேதி இம்மாநாடு நடைபெறவுள்ளது.11250988_10206893107595967_7986702418057771344_n

தமிழ்க் கணினி அறிவை வளர்க்கும் நோக்கிலும், வேகமாக மாறிவரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழின் பயன்பாட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும், உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் இந்த 14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது.
11392936_10206893108996002_1182522769964401426_n
சிங்கப்பூரில் உள்ள சிம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இம்மாநாட்டில், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என உலகம் முழுவதும் இருந்து 200 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

மலேசியா சார்பில் சுமார் 50 பேராளர்கள் கலந்து கொள்கின்றனர்.

#TamilSchoolmychoice

10984610_10206892358257234_2404132736382402449_n

(மலேசியா சார்பில்  கலந்து கொள்ளும் பேராளர்கள்)

கடந்த 12-வது உலகத் தமிழ் இணைய மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலுள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 13-வது உலகத் தமிழ் இணைய மாநாடு பாண்டிச்சேரியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

படங்கள்: மலேசியப் பேராளர் திரு.வாசுதேவன் லட்சுமணன் பேஸ்புக்.