Home கலை உலகம் பர்மா முஸ்லிம்களை கொல்வதை நிறுத்துங்கள் – நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்!

பர்மா முஸ்லிம்களை கொல்வதை நிறுத்துங்கள் – நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்!

696
0
SHARE
Ad

vijayசென்னை, மே 30 – நடிகர் விஜய் சேதுபதி தனது ஃபேஸ்புக் மூலம், பர்மா மக்களை கொல்வதை நிறுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பர்மாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பலவகையான அடக்கு முறைகள் நடைபெறுவதாகவும், இஸ்லாமியர்கள் மக்கள் படுகொலை செய்யப்படுதாகவும் செய்திகள் வருகின்றன.

அவை தொடர்பாக நிறைய புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியூட்டிக் கொண்டிருக்கின்றன. சமூகவலைத் தளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் செய்திகளைப் பார்த்துவிட்டு அவற்றிற்கு எதிராக நடிகர் விஜய்சேதுபதி குரல் எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், தமிழகக் கட்சிகள் கூட இதுவரை இதுபற்றி பேசாத நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, தன்னுடைய முகநூல் பக்கத்தில், ‘பர்மா மக்களை கொல்வதை நிறுத்துங்கள்!’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.