சிங்கப்பூர், மே 30 – சிங்கப்பூரில் உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று காலை துவங்கியது. இன்று மே 30 தொடங்கி ஜூன் 1 -ம் தேதி இம்மாநாடு நடைபெறவுள்ளது.
தமிழ்க் கணினி அறிவை வளர்க்கும் நோக்கிலும், வேகமாக மாறிவரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழின் பயன்பாட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும், உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் இந்த 14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது.
சிங்கப்பூரில் உள்ள சிம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இம்மாநாட்டில், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என உலகம் முழுவதும் இருந்து 200 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
மலேசியா சார்பில் சுமார் 50 பேராளர்கள் கலந்து கொள்கின்றனர்.
(மலேசியா சார்பில் கலந்து கொள்ளும் பேராளர்கள்)
கடந்த 12-வது உலகத் தமிழ் இணைய மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலுள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 13-வது உலகத் தமிழ் இணைய மாநாடு பாண்டிச்சேரியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
படங்கள்: மலேசியப் பேராளர் திரு.வாசுதேவன் லட்சுமணன் பேஸ்புக்.