Home நாடு பழனிவேலின் அமைச்சர் பதவி தப்புமா?: பிரதமர் கையில் முடிவு என்கிறார் ஹிஷாமுடின்

பழனிவேலின் அமைச்சர் பதவி தப்புமா?: பிரதமர் கையில் முடிவு என்கிறார் ஹிஷாமுடின்

527
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 2- பழனிவேல் அமைச்சரவையில் தொடர்ந்து நீடிப்பது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் கையில் உள்ளது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார்.

Hishamuddin Hussein Onn 300 x 200மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என அண்மையில் செய்தி வெளியானது. இதுகுறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே ஹிஷாமுடின் மேற்கண்டவாறு கூறினார்.

“அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து பிரதமர்தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் (செய்தியாளர்கள்) பேசிக் கொண்டிருப்பது பிரதமரிடம் அல்ல. அமைச்சரவை மாற்றம் அல்லது பழனிவேலின் நிலை குறித்துப் பிரதமரிடம்தான் கேட்க வேண்டும்” என ஹிஷாமுடின் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மஇகாவில் கடந்த சில மாதங்களாகப் பழனிவேல் மற்றும் சுப்ரா தரப்பினரிடையே தலைமைத்துவ மோதல் நிகழ்ந்து வருகிறது.

palanivel540px_540_361_100இந்நிலையில் சங்கப் பதிவகம் பிறப்பித்த உத்தரவு டாக்டர் சுப்ரா தரப்புக்கு ஆதரவாக அமைந்துள்ளது. மேலும் பழனிவேல் மஇகா உறுப்பியத்தை இழந்துவிட்டதாகவும் சங்கப் பதிவகம் அண்மைய தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்துச் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நஜிப், சங்கப் பதிவகத்தின் முடிவையே தாம் ஏற்கப் போவதாகவும், அமைச்சரவையில் பழனிவேல் நீடிப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்துப் பழனிவேல் வகித்து வரும் அமைச்சர் (இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல்) பதவியும், எம்.பி., (கேமரன்மலை நாடாளுமன்ற உறுப்பினர்) பதவியும் நீடிக்குமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.