Home கலை உலகம் என் பாடல்களுக்கு என்னிடமே பேரம் பேசுகிறார்கள்: இளையராஜா வருத்தம்!

என் பாடல்களுக்கு என்னிடமே பேரம் பேசுகிறார்கள்: இளையராஜா வருத்தம்!

588
0
SHARE
Ad

2012_1$thumbimg110_Jan_2012_103201450-llசென்னை, ஜூலை 3- தியாகராயநகர் வாணி மகாலில், மெல்லிசைக் கச்சேரி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தலைமைச் சங்கத்தின் ஆலோசனை கூட்டம், இசைஞானி இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து மெல்லிசை குழு நடத்துபவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் இளையராஜா பேசியதாவது:–

#TamilSchoolmychoice

“நான் உங்களிடம் பணம் கேட்டு வரவில்லை. நான் எப்போதும் கொடுப்பவன்; கேட்பவன் அல்ல. எத்தனையோ ஆயிரம் பாடல்களை உங்களுக்காக வழங்கி இருக்கிறேன்.

நான் இப்போது உங்களைச் சந்திக்கும் காரணம் என்னவென்றால், என்னுடைய பாடல்களையோ, மற்றவர்கள் பாடல்களையோ நீங்கள் பாடும் போது சட்டப்படி அதற்கு அனுமதி பெற வேண்டும்.

இதற்காகத் தான் ஐ.பி.ஆர்.எஸ். அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த அமைப்பின் நிர்வாகம் தவறான கணக்குக் காட்டி என் போன்றவர்களை ஏமாற்றி வருகிறது.

என் பாடல்களுக்காக அவர்கள் வசூலிப்பதில் பத்து சதவீதம் கூட எனக்கு வந்து சேரவில்லை. அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டுமாம். இது என்ன நியாயம்? இதனால் அந்த அமைப்பில் இருந்தும் விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளேன்.

உங்களிடம் இதை நேரடியாகச் சொல்லி, என் பாடல்களுக்கான தொகையை என் அலுவலகத்தில் நேரடியாகச் செலுத்தச் சொல்லலாம் என யோசித்து உங்களை அழைத்தேன்.

இவ்வளவு தொகைதான் செலுத்த வேண்டும் என்று நான் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை.

எத்தனை பாடல்கள் பாடுகிறீர்கள், அதற்கு எவ்வளவு கொடுக்கலாம் என்று நீங்களும் சினிமா இசைச் சங்கமும் பேசி முடிவெடுக்கலாம்.

பாபநாசம் சிவன், டி.ஆர். மகாலிங்கம், ஜி.ராமநாதன், தட்சிணா மூர்த்தி, எம்.எஸ்.ஞானமணி, எஸ்.எம்.சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இன்றைக்கு உள்ள இசையமைப்பாளர்கள் வரை எல்லோருக்கும் பலன் கிடைக்கட்டும்” என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இளையராஜா கேட்பது நியாயம் தானே? ஒருவரது உழைப்பைச் சம்பந்தம் இல்லாதவர்கள் சுரண்டுவதா?

ஒருவருடைய சொந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராய் வித்தை காட்டிக் காசு பார்ப்பது ஈனத்தனமானதில்லையா?

இசைக் கலைஞர்கள் சிந்திக்கட்டும்!