சென்னை, ஜூலை 4- கமல்,கெளதமி நடிப்பில் வெளி வந்துள்ள பாபநாசம் படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மலையாளத்தில் அமோக வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படம் தான், தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் என்கிற பெயரில் மறுபதிப்பாகி வெளியானது.
த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால் சாதாரணக் குடும்பத் தலைவராக மிகவும் இயல்பாக நடித்திருந்தார். கமல் அந்த உணர்ச்சி மாறாமல் மாறுபட்ட நடிப்பைப் பாபநாசம் படத்தில் வழங்கியிருந்தார்.
இதுபற்றிப் பாபநாசம் படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் கூறியிருப்பதாவது:
“மோகன்லாலின் ஜார்ஜ்குட்டி அமைதியும் இறுக்கமும் கொண்ட மலையோரக் கிறிஸ்துவர். சுயம்புலிங்கம் தானாக முளைத்து வரும் நாடார் வணிகர். நட்பும் நகைச்சுவையும் கொண்ட, உணர்ச்சிகரமான எளிய மனிதர். அந்த வேறுபாட்டைக் கமல் கண்முன் காட்டியிருக்கிறார்.”என்று கூறியுள்ளார்.
சரி, கமலுக்குப் பதிலாக ரஜினி இந்தப் படத்தில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? கற்பனை செய்து பாருங்கள்!
ஆனால், உண்மையில் த்ரிஷ்யம் படத்தைத் தமிழில் பண்ணும் வாய்ப்பு முதலில் ரஜினிக்குத் தான் வந்தது. ரஜினி நடித்தால் படத்துக்கு வித்தியாசமான பரிமாணம் கிடைக்கும் என்று இயக்குநர் ஜீத்தும் நினைத்துள்ளார்.
குறிப்பிட்ட இரண்டு காட்சிகளைத் தனது ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்பதால் நடிக்க மறுத்துள்ளார் ரஜினி.
ரஜினி நடிக்கத் தடையாக இருந்த இரண்டு காட்சிகள்:
ஒன்று:காவல்துறையினரால் நாயகன் பயங்கரமாகத் தாக்கப்படுவது.
மற்றொன்று: உச்சக்கட்ட காட்சி மிகவும் எதார்த்தமாக இருப்பது.
இதெல்லாம் ரஜினிக்கு இருக்கும் சூப்பர்ஸ்டார் பிம்பத்திற்குச் சரிப்படாது என்பது ரஜினியின் எண்ணம்.
சரி தானே இரகிகர்களே!