போர்க் குற்றம் தொடர்பாக ஐநா-வின் விசாரணை அறிக்கையில், கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட 40 இலங்கை அரசியல்வாதிகள், அரசு மற்றும் இராணுவ அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது. அமெரிக்கச் சட்டப்படி, அமெரிக்கக் குடிமகன் ஒருவர், உலகில் எந்தப் பாகத்தில், போர்க்குற்றங்களை இழைத்திருந்தாலும், அவரை விசாரித்துத் தண்டிக்க முடியும்.
கோத்தபய ராஜபக்சே மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படுவது உறுதியானால், அவர் மீது அமெரிக்கா, நேரடியாகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இதனை அறிந்து வைத்துள்ள கோத்தபய ராஜபக்சே முன்னெச்சரிக்கையாக அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிட முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.