Home உலகம் வங்காளதேசத்தில் பயங்கரம்: இலவசங்களைப் பெறும் முயற்சியில் 23 பேர் பலி!

வங்காளதேசத்தில் பயங்கரம்: இலவசங்களைப் பெறும் முயற்சியில் 23 பேர் பலி!

554
0
SHARE
Ad

bangladesh1டாக்கா, ஜூலை 10 – இஸ்லாமிய தேசமான வங்காளதேசத்தில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்று, பொதுமக்களுக்கு இலவச ஆடைகளை வழங்குவதாக அறிவித்தது. இன்று அதனைப் பெரும் முயற்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 23 பேர் பரிதாபமாகப் பலியாகி உள்ளனர்.

வங்காளதேசத்தின் வடக்கு நகரமான மைமென்சிங்கில், தொழில்அதிபர் ஒருவரின் ஆடை தயாரிப்பு நிறுவனம், புனித ரமலானை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோருக்கு இலவச ஆடைகளைத் தருவதாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து இலவசங்கள் வழங்கப்படும் அந்தப் பகுதியை 1500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். சிறிது நேரத்தில் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் இலவச ஆடைகளை வழங்கத் தொடங்கினர். அப்போது, பொதுமக்கள் ஒரு சிறிய நுழைவாயிலின் வழியாக இலவசங்கள் தரும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

#TamilSchoolmychoice

அப்போது நூற்றுக்கணக்கானோர் இலவசங்களைப் பெரும் நோக்கத்துடன் அவசரப்பட்டதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 23 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் வங்காளதேசக் காவல் துறை, முதற்கட்டமாக 7 பேரைக் கைது செய்துள்ளது.