சென்னை, ஜூலை 10 – கடலில் விழுந்த டோர்னியர் விமானத்தின் மீட்கப்பட்ட பாகத்தின் புகைப்படம் இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட அந்த புகைப்படத்தில் சக்கரம் போன்ற அமைப்பு உள்ளதால் அது விமானத்தின் ‘அண்டர்கேரேஜ்’ (Under Carriage) என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட விமானத்தின் டேட்டா ரெக்கார்டர்
இதற்கிடையே மீட்கப்பட்ட தகவல் பதிவு செய்யும் கருவியை (Data Recorder) இந்துஸ்தான் ஏரோ நாட்டிகஸ் நிறுவனம் ஆராய்ந்து வருவதாகவும், அதன் முடிவில் விமானம் ஏன் கடலில் விழுந்தது? அதில் பயணித்த மூன்று பேருக்கு என்னவாயிற்று? என்பது குறித்து தெரியவரும் என கடலோர காவல்படை கிழக்கு வட்டார தலைமை ஆய்வாளர் ஷர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி காணாமல் போன டோர்னியர் விமானத்தின் சிதைந்த பாகங்கள் 33 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.