Home இந்தியா மக்கள் தொகையில் சீனாவையே மிஞ்சப் போகிறது இந்தியா!  

மக்கள் தொகையில் சீனாவையே மிஞ்சப் போகிறது இந்தியா!  

1424
0
SHARE
Ad

Indiaபுதுடெல்லி, ஜூலை 11- உலக மக்கள் தொகை தினமான இன்று, இந்தியாவின் மக்கள் தொகை பற்றிய அறிக்கையைத் தேசிய மக்கள் தொகை நிதியம் வெளியிட்டது. அதன்படி இன்று  மாலை 6.30 மணி அளவில் இந்தியாவின் மக்கள் தொகை 127 கோடியே 42 லட்சத்து 42 ஆயிரத்து 780 ஆகும்.

தற்போது சீனா139 கோடி மக்கள் தொகையுடன் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் நமது நாட்டில் மக்கள் பெருக்கம் 1.6 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து வருகிறது. இதேவேகத்தில் அதிகரித்துக்கொண்டே போனால் 2050–ம் ஆண்டு இந்திய மக்கள்தொகை 222 கோடியாக உயர்ந்து சீனாவையே மிஞ்சி விடும்.

#TamilSchoolmychoice

இப்படி மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் பெருக்கிக் கொண்டே போனால், மக்கள் தொகை சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் நாட்டில் ஏற்படுவது உறுதி.

Indian_population