நைரோபி, ஜூலை 27 – அமெரிக்க அதிபர் ஒபாமா, அதிபராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக தனது தந்தையின் சொந்த நாடான கென்யாவிற்கு மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணம், அந்நாட்டு மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி உள்ளது. அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்ட நிலையில், நேற்று நைரோபியில் உள்ள ஸ்டேட் ஹவுசில் அவருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒபாமா, கென்யாவின் பாரம்பரிய ‘லிப்பாலா’ (Lipala) நடனத்தை அந்நாட்டு மக்களுடன் சேர்ந்து ஆடி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இந்த காணொளி நட்பு ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டின் பிரபல பாடகர் சௌதி சோலுடன், ஒபாமா தோள் மீது கைபோட்டுக் கொண்டு மிக சாதரணமாக ஆடி அனைவரையும் பரவசப்படுத்தினார்.
ஒபாமாவின் இந்த பயணம், கென்யாவிற்கு எந்த அளவிற்கு மகிழ்ச்சி அளித்ததோ, அதே அளவிற்கு சர்ச்சைகளையும் கிளப்பி உள்ளது. பொது நிகழ்ச்சி ஒன்றில் ஒபாமா, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்தும், மனிதர்களை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்காக ஒதுக்குவது குறித்தும் பேசிய விதம், கென்யா அரசியல் தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல அரசியல் பிரபலங்கள் அவரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஒபாமா ஆடிய லிப்பாலா நடனத்தின் காணொளியை கீழே காண்க:
https://www.youtube.com/watch?v=5RiDClb1FK4