Home இந்தியா “கலாமின் ஒரே மூச்சு இந்தியா தான்” – உதவியாளர் பொன்ராஜ்

“கலாமின் ஒரே மூச்சு இந்தியா தான்” – உதவியாளர் பொன்ராஜ்

538
0
SHARE
Ad

dr-apj-abdul-kalam-speechசென்னை, ஜூலை 27 – “அப்துல் கலாமின் ஒரே மூச்சு இந்தியா மட்டும் தான். 2020 கனவை நினைவாக்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருந்தது” என்று மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

கலாமின் இழப்பு தொடர்பாக பொன்ராஜ் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “இந்தியாவின் உயர் பதவியான ஜனாதிபதி பதவியைக் கூட அவர், நன்மை செய்வதற்கான கருவியாக மட்டுமே பார்த்தார். பல நாட்கள் இரவு 2 மணி வரை இந்தியாவின் எதிர்கால திட்டங்கள் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். இந்தியா மட்டும் தான் அவரின் ஒரே மூச்சாக இருந்தது. 2020 கனவை நினைவாக்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.